FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியூசி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸி. அணியில் லயன், லபுஷேன் நீக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து...

35 வினாடிகள் முன்பு
நியூசி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸி. அணியில் லயன், லபுஷேன் நீக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் லயன் நீக்கம் - படம்: கிரிக்கெட்.காம்.ஏயு
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாதன் லயனுக்கு மாற்றாக புதிய வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் கடந்த 13 ஆண்டுகளாக முதன்மை சுழல்பந்து வீச்சாளராக 39 வயதான நாதன் லயன் இருக்கிறார். தற்போது அவர் நீக்கப்பட்டு புதிய வீரர் களமிறக்கப்பட இருக்கிறார். இதற்கான 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சுழல் பந்து வீச்சாளர் கோரி ரோச்சிகியோலி மற்றும் குயின்ஸ்லாண்ட் பேட்டர் ஜேக் கிளேட்டன், முதல் டெஸ்ட்டில் விளையாட தேர்வாகியுள்ளார்கள். கூப்பர் கானலி, மார்னஸ் லபுஷேன் தேர்வுப் பட்டியலில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என தோல்வியுற்றது. சமீபத்திய போட்டிகளில் லயன் பெரிதாக விக்கெட் எடுக்காததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஜியார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் திடலில் டிச.9ல் நடைபெற இருக்கிறது. அடுத்து அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னியில் நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜாக் கிளேட்டன், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், மைக்கேல் நெசர், மேத்திவ் ரென்ஷா, கோரி ரோச்சிகியோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

summary

Nathan Lyon is out as Australia''s top-choice spin bowler after 13 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.