2-வது டி20: இங்கிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி குயீன்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இங்கிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நிகில் சௌதரி 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோயல் டேவிஸ் 39 ரன்கள், ஜேக் ஃபிரேஸர் மெக்கர்க் 27 ரன்கள், ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் பென் துவார்ஷூயிஸ் தலா 18 ரன்கள் எடுத்தனர். சாம் கரண் வீசிய 20-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார் பென் துவார்ஷூயிஸ். அவர் 4 பந்துகளில் 18* ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் ஹென்றி க்ரோகோம்ப் மற்றும் சாம் கரண் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.