2-வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே கார்ட்னர் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 39 ரன்கள், எல்லிஸ் பெரி 11 ரன்கள், அன்னாபெல் சதர்லேண்ட் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் மற்றும் நென்ஸி படேல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரீ இல்லிங் மற்றும் மெலி கெர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அந்த அணியில் கேப்டன் மெலி கெர் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மேடி கிரீன் 26 ரன்கள், போலி இங்லிஷ் 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜார்ஜியா வார்ஹம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஷ்லே கார்ட்னர் இரண்டு விக்கெட்டுகளையும், கிம் கார்த் மற்றும் லூசி ஹாமில்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Australia won the second T20I against New Zealand by 40 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.