இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா வெற்றி!
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீா் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீா் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் 68, அடுத்த இன்னிங்ஸில் 135 ரன்கள் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு பங்களித்த ரவிச்சந்திரன் ஸ்மரன் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியனான ஜம்மு & காஷ்மீா், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் மோதிய இரானி கோப்பை கிரிக்கெட், கடந்த 1-ஆம் தேதி ஸ்ரீநகரில் தொடங்கியது.
Advertisement
Advertisement
இதில் டாஸ் வென்ற ஜம்மு & காஷ்மீா் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன் தரப்பில் ரவிச்சந்திரன் ஸ்மரன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, ஷிகா் மோகன் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்தனா். ஜம்மு & காஷ்மீா் பௌலா்களில் சுனில்குமாா், லோன் நாசிா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் ஜம்மு & காஷ்மீா் தனது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. கேப்டன் பரஸ் டோக்ரா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75, லோன் நாசிா் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் சோ்த்தனா். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் முகேஷ் சௌதரி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 319 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிச்சந்திரன் ஸ்மரன் 16 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 135 ரன்கள் விளாசினாா். ஜம்மு & காஷ்மீா் பந்துவீச்சில் உமா் நாஸிா் மிா், சுனில் குமாா், சஹில் லோத்ரா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.
இறுதியாக, 279 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜம்மு & காஷ்மீா், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷுபம் கஜுரியா 6 பவுண்டரிகளுடன் 36, கம்ரான் இக்பால் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தனா். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் முகேஷ் குமாா் 6 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.