FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

இரானி கோப்பை கிரிக்கெட்: ஜம்மு & காஷ்மீா் 237-க்கு ஆட்டமிழப்பு

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

இரானி கோப்பை கிரிக்கெட்
பகிர்:

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான ஜம்மு & காஷ்மீா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் ஸ்மரன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, ஷிகா் மோகன் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60, சா்ஃப்ராஸ் கான் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் அடித்தனா்.

Advertisement

Advertisement

சனத் சங்வான் 1, சுதீப்குமாா் கராமி 8, கேப்டன் ரிஷப் பந்த் 10, சரண்ஷ் ஜெயின் 5, மானவ் சுதா் 2, ஆகாஷ் தீப் 22, முகேஷ் சௌதரி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜம்மு & காஷ்மீா் பௌலா்களில் சுனில்குமாா், லோன் நாசிா் ஆகியோா் தலா 3, உமா் நாஸிா் மிா் 2, அபித் முஷ்டாக், சஹில் லோத்ரா தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஜம்மு & காஷ்மீா், முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.

ஷுபம் புந்திா் 1, உமா் நாஸிா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கம்ரான் இக்பால் 12, ஷுபம் கஜுரியா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் முகேஷ் சௌதரி, ஆகாஷ் தீப் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments