ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த தென்னாப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை (அக்டோபர் 9) முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 8) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரம்
அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், டேவிட் பெடிங்ஹம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெரைன், மார்கோ யான்சென், சிமோன் ஹார்மர், கேசவ் மகாராஜ், ஆன்ரிச் நார்ட்ஜே.
Cricket South Africa has announced the playing XI for the first Test match against Australia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.