சூர்யவன்ஷி vs சஞ்சு சாம்சன்... ஓபனர் யார்? தொடர் குழப்பத்தில் இந்திய அணி!
இந்திய டி20 அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைப்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதைப் பற்றி...
இந்திய டி20 அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைப்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இந்தியா வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (அக். 10) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற அதே உத்வேகத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.
Advertisement
Advertisement
ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரராக அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் அல்லது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி இருவரில் யாரை ஓபனராக இறக்குவது என்ற பெரும் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சஞ்சு சாம்சன் கடந்த 4 போட்டிகளில் விளையாடி 9, 7, 2, 11 என வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், அதேநேரத்தில் வெறும் 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 193 ரன்களைக் குவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், இந்திய அணி நிர்வாகத்தின் ஒத்துழைப்பில் ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சூர்யவன்ஷிக்கு தொடக்க ஆட்டக்காரராக இடம் வழங்கப்பட்டு சாம்சனுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆனாலும், அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடிக்கே இந்திய அணி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த போட்டியில், சூர்யவன்ஷி 14, 13 மற்றும் 15 ரன்களை எடுத்திருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 18 மற்றும் 35 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வந்தால், அவர் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமான தோன்றுகிறது. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவர் மீண்டும் சொதப்பும் பட்சத்தில் இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு, சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sanju Samson's lean run is the lone sore point in an otherwise firing batting line-up and it will prompt the team management to ponder over pairing teen sensation Vaibhav Sooryavanshi with opener Abhishek Sharma in the second T20I against the West Indies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.