FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல் டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலியா 187 ரன்கள் குவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

9 அக்டோபர் 2026, 8:29 pm IST
- படம் | AP
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (அக்டோபர் 9) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாளில் 187 ரன்கள் குவிப்பு!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ ரென்ஷா 115 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, மார்னஸ் லபுஷேன் 37 ரன்கள், பாட் கம்மின்ஸ் 33* ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்தனர். அலெக்ஸ் கேரி 14 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென், வியான் முல்டர் மற்றும் ஆன்ரிச் நோர்கியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

summary

In the first innings of the first Test match against South Africa, the Australian team has scored 187 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments