FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இமாலய வெற்றி: ஷுப்மன் கில் மாதிரியே பதிவிட்டு கிண்டல் செய்த ஷாய் ஹோப்!

இந்தியாவுக்கு எதிரான இமாலய வெற்றிக்குப் பிறகு ஷாய் ஹோப் பதிவு குறித்து...

ஷுப்மன் கில், ஷாய் ஹோப் - படங்கள்: இன்ஸ்டா / ஷுப்மன் கில், ஷாய் ஹோப்
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான இமாலய வெற்றிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தனது இன்ஸ்டா பதிவில் ஷுப்மன் கில் போலவே பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.

இரண்டாவது டி20 கிரிக்கெட்டில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து வென்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டிக்குப் பிறகு ஷாய் ஹோப் தனது இன்ஸ்டாவில், “ 250? கூல்” எனப் பதிவிட்டிருந்தார். இது டி20 வரலாற்றிலேயே சேஸிங்கில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவின் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு நாள் போட்டியில் 406 ரன்கள் இலக்கை சேஸ் செய்து அசத்தினார். அந்தப் போட்டிக்குப் பிறகு ஷுப்மன் கில் இன்ஸ்டாவில், “406? கூல்” எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது, ஷாய் ஹோப் தனது பதிவில் ஷுப்மன் கில் போலவே பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார். இந்தப் பதிவு இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் டேரன் சமி உள்பட பல வீரர்கள் இந்தப் பதிவில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

summary

Colossal Victory: Shai Hope mocks by posting just like Shubman Gill!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments