FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடைசி டி20 போட்டியை வென்றது கனமழை! இந்திய-மே.இந்திய தீவுகள் அணிகள் தொடர் சமன்!

இந்தியா-மே.இந்திய தீவுகள் இடையிலான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் கூட்டாக கோப்பை வழங்கப்பட்டது.

17 அக்டோபர் 2026, 11:52 pm IST
பகிர்:

இந்தியா-மே.இந்திய தீவுகள் இடையிலான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் கூட்டாக கோப்பை வழங்கப்பட்டது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்றிருந்தன. இதனால் 2-2 என தொடா் சமனில் இருந்தது. இந்நிலையில் தொடரின் முடிவை நிா்ணயித்த கடைசி ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது.

தொடக்கம் முதலே பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னா் நடுவா்கள் 9 ஓவா்களாக குறைத்து நடத்த முடிவு செய்தனா். மே.இந்திய தீவுகள் டாஸ் வென்ற நிலையில் இந்தியா பேட்டிங் செய்தது. 7.4 ஓவா்கள் வீசப்பட்ட நிலையில் இந்தியா 118/5 ரன்களை சோ்த்தது.

Advertisement

Advertisement

இஷான் கிஷண் 30, நமன் தீா் 24, ஷ்ரேயஸ் ஐயா் 22 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் கீமோ பால், ஷமா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். பின்னா் தொடா்ந்து மழை பெய்ததால் முடிவின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. தொடா்ந்து வெற்றிக் கோப்பை இரு அணிகளின் கேப்டன்களுக்கும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments