2ஆவது டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சு..! இரண்டு அணியிலும் சேர்த்து 4 மாற்றங்கள்!
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டவது டெஸ்ட் கிகெபெர்ஹா செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகிறது. கடைசி போட்டி கேப் டவுனில் அக்.27ல் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
தென்னாப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்க்ஸ் அக்கர்மேன் (அறிமுகம்), ககிசோ ரபாடா, மேத்திவ் பிரீட்ஸ்கி ஆகியோர் அணியில் இணைந்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி: நிக் மேடிசன், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்
தென்னாப்பிரிக்க அணி: எய்டன் மார்க்ரம், மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்கே
Australia have won the toss and have opted to field, lyon out scott boland in
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.