செயின்ட் ஜார்ஜ் திடலில் மழை..! தென்னாப்பிரிக்கா - ஆஸி. போட்டி தொடங்குவதில் தாமதம்!
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் முதல் பந்து வீசாமலேயே போட்டி தாமதமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இன்று மதியம் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், மழையினால் தாமதமாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டவது டெஸ்ட் கிகெபெர்ஹா செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகிறது. கடைசி போட்டி கேப் டவுனில் அக்.27ல் நடைபெற இருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மழை சற்று தீவிரமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று குறைவாக வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் போட்டி ஐந்து நாள்கள் நடைபெற்று விறுவிறுப்பாகச் சென்றது. அதில் ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதுவரை டெஸ்ட்டில் தோல்வியே சந்திக்காத கேப்டனாக இருந்த டெம்பா பவுமா முதல்முறையாக இந்த டெஸ்ட்டில் தோல்வியுற்றார். பாட் கம்மின்ஸ் அவரது தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
South africa St George's Park Test Match start delayed due to rain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.