FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஃபாலோ ஆன்: 99 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா.! மார்கோ யான்சென் 5 விக்கெட்டுகள்!

இரண்டாம் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மார்கோ யான்சென் - படம்: ஏபி
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே 28 ரன்கள் எடுத்தார்.

கடந்த அக்.18ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பவுமா 179 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டாதது கவனிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 28 ரன்களும், டிராவிஸ் ஹெட், லபுஷெனெ தலா 14 ரன்களும் எடுத்தார்கள்.

தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 5, ரபாடா, வியான் முல்டர் தலா 2, ஆன்ரிச் நோர்க்யா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தென்னாப்பிரிக்காவின் ரன்களில் பாதியைக் கூட அடிக்காததால், ஃபாலோ ஆன் ஆன ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது. தற்போது, இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் எடுத்துள்ளது.

summary

Marco Jansen brilliant bowling..! Australia are bundled out for 99 runs Follow on!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments