FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டக் அவுட்..! பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பல்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குறித்து...

ஆட்டமிழந்து வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் - AP
பகிர்:

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். அவரது மோசமான பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார்.

கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 402 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் அஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் 18 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில், பேட்டிங்கில் 6 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார்.

இரண்டாவது ஓவரில் 26 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்கவில்லை. மொத்தமாக 44 ஓவர்களாக விக்கெட் இன்றி பந்துவீசியுள்ளார். தலைமைப் பண்பிலும் (கேப்டன்சி) சொதப்பி வருகிறார்.

தொடரைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் ஒரு கேப்டனாக எதுவுமே செய்யாதவராக இருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Aussie captain Pat Cummins out for a duck..! A poor performance with the bat, following his struggles with the ball!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments