FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல் தர கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத இஷான் கிஷன்; வெற்றிநடை தொடருமா?

முதல் தர கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத கேப்டனாக இஷான் கிஷன் உள்ளார்.

6 செப்டம்பர் 2026, 3:21 pm IST
கேப்டன் இஷான் கிஷன் - படம் | AP
பகிர்:

முதல் தர கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத கேப்டனாக இஷான் கிஷன் உள்ளார்.

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான ஈஸ்ட் ஸோன் அணி, சௌத் ஸோன் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஈஸ்ட் ஸோன் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை தோல்வியே காணாத கேப்டனாக இஷான் கிஷன் வலம் வருகிறார். இதுவரை 15 முதல்தர போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்தியுள்ள இஷான் கிஷன், 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

தற்போது, சௌத் ஸோன் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அவரது வெற்றி நடையைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

summary

Ishan Kishan is a captain who has never faced defeat in first-class cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments