FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு பாபர் அசாம் பேசியதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.

55 வினாடிகள் முன்பு
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - படம் | AP
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது பேட்டர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணிக்கு கடினமாக இருக்கும். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை ஆலோசித்து, சிறந்த பிளேயிங் வெலனை உருவாக்க வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், எந்த வடிவிலான போட்டி என்பதற்கு ஏற்றவாறும் பிளேயிங் லெவன் இருக்க வேண்டும். ஆனால், புதிய வீரர்கள் நன்றாக செயல்பட்டனர் என்றார்.

மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் அண்மையில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Pakistan captain Babar Azam has spoken about the team's complete loss in the Test series against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments