FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

21 செப்டம்பர் 2026, 7:07 pm
ஜாகீர் கான்
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அண்மையில் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சிஎஸ்கேவின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஜாகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக வரவேற்கிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

summary

Former Indian fast bowler Zaheer Khan has been appointed as the head coach of the Chennai Super Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.