FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜப்பானுக்கு எதிரான டி20-ல் இந்தியா பேட்டிங்.. மழையால் 5 ஓவர்களாக குறைப்பு!

ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

22 செப்டம்பர் 2026, 12:48 pm IST
பகிர்:

ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய அணி, இந்தியா - ஜப்பான் இடையேயான 75 ஆண்டுகால நட்பைப் போற்றும் வகையில் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது.

இந்தப் போட்டி காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் திடலில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்ததால் போட்டி தாமதமானது. காலை 11.45 வரை மழை தொடர்ந்ததால், ஆட்டத்தின் 20 ஓவர்கள் 5 ஓவர்களாக குறைப்பட்டன.

Advertisement

Advertisement

அதைத்தொடர்ந்து டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

ஜப்பான் அணி விவரம்: லாச்லான் யமமோட்டோ, ரியோ சகுரானோ, கெண்டல் கடோவாக்கி (கேப்டன்), பெஞ்சமின் இடோ, வட்டாரு மியாவ்ச்சி, அலெக்சாண்டர் ஷிராய் (விக்கெட் கீப்பர்), சார்லி ஹரா, இப்ராஹிம் டகாஹாசி, டெக்லான் சுசூகி, மகோடோ தனியமா, ஷோமா சுகாயா.

summary

shreyas iyer has won the toss and opt to bat. Only five overs per side due to delay because of a wet outfield. But, some action finally underway in the historic T20I match in Sano

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments