வில் ஜாக்ஸ் ஆல்-ரவுண்ட் அசத்தல்: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
வில் ஜாக்ஸ் ஆல்-ரவுண்ட் அசத்தலால் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...
வில் ஜாக்ஸ் ஆல்-ரவுண்ட் அசத்தலால் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி ரிவர்சைட் கிரிக்கெட் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இலங்கையின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 67 ரன்களும், ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் 46 ரன்களும் ஜோ ரூட் 44 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை தரப்பில் அஷிதா மற்றும் சச்சிந்து தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 27 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 14 ரன்களிலும், கேப்டன் குஷல் மெண்டிஸ் 42 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பேட்டிங்கில் அசத்திய வில் ஜாக்ஸ் பந்து வீச்சிலும் மிரட்டினார். அவரின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை வீரர்கள் வெளியேறினர்.
37 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி ஆல்-அவுட்டானது. அசத்தலாகப் பந்து வீசிய வில் ஜாக்ஸ் 7 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.
Will Jacks' all-round efforts helped England grind out an 89-run victory over Sri Lanka in the first one-day international at Chester-le-Street to continue their quiet revival in white-ball cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.