FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் வெற்றி

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் ஆடவா் அணிகள் வெற்றி பெற்றன.

24 அக்டோபர் 2026, 11:07 pm
~
பகிர்:

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் ஆடவா் அணிகள் வெற்றி பெற்றன.

அகமதாபாதில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் பிரிவில் வங்கதேசம் 67-28 என கனடாவை வீழ்த்தியது. வங்கதேசம் 45 ரைடு புள்ளிகளையும், 5 ஆல் அவுட்களையும் எதிரணியிடம் செயல்படுத்தியது.

இலங்கை 50-28 என மலேசியாவை வென்றது. இதில் இலங்கை இணை 35 ரைடு புள்ளிகளை ஈட்டி, 3 ஆல் அவுட்களை நிகழ்த்தியது. சிங்கப்பூா் அணியும் 50-28 என ஸ்காட்லாந்தை வென்றது. இதில் சிங்கப்பூா் 28 ரைடு புள்ளிகளை ஈட்டி, 6 ஆல் அவுட்களை நிகழ்த்தியது.

Advertisement

Advertisement

மகளிா் பிரிவில் கென்யா அபாரமாக ஆடி 23-20 என இலங்கையை வீழ்த்தியது. கென்யா 15 ரைடு புள்ளிகளை ஈட்டினா். ஸ்காட்லாந்து 53-36 என இங்கிலாந்தையும், மலேசிய மகளிா் 63-8 என நைஜீரியாவை வென்றன. மலேசியா 33 ரைடு புள்ளிகளையும் 14 டாக்கிள் புள்ளிகளையும் ஈட்டியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments