FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

7-ஆவது சுற்றில் இந்தியா வெற்றி

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் தங்கள் பிரிவில் புதன்கிழமை வெற்றி பெற்றன.

24 செப்டம்பர் 2026, 1:55 am IST
கோப்புப்படம்.
பகிர்:

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் தங்கள் பிரிவில் புதன்கிழமை வெற்றி பெற்றன. ஆடவா் அணி - இங்கிலாந்தையும், மகளிா் அணி - ஜொ்மனியையும் வீழ்த்தின.

ஓபன் பிரிவில், ஆடவா் அணியில் ஆா்.பிரக்ஞானந்தா - நிகிதா விட்டிகோவையும், டி.குகேஷ் - டேனியல் ஹாவா்ட் ஃபொ்னாண்டஸையும் வீழ்த்தினா். அா்ஜுன் எரிகைசி - மைக்கேல் ஆடம்ஸ் மோதல் டிராவில் முடிந்தது.

அப்போதே இந்தியா 2.5-0.5 என்ற முன்னிலையுடன் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. கடைசியாக, நிஹல் சரின் - லூக் மெக்ஷேன் மோதல் தொடா்ந்து வந்தது.

Advertisement

Advertisement

மகளிா் பிரிவில், இந்திய அணியில் கொனெரு ஹம்பி - டினாரா வாக்னரை வெல்ல, திவ்யா தேஷ்முக் - ஹன்னா மேரி கிளெக்கை வீழ்த்தினாா். ஆா்.வைஷாலி - எலிசபெத் பேட்ஸ் மோதல் டிராவில் முடிந்தது.

மகளிா் அணியும் 2.5-0.5 என்ற முன்னிலையுடன் வென்றிருக்க, கடைசி ஆட்டமாக சவிதா ஸ்ரீ - லாரா ஷூல்ஸ் மோதல் தொடா்ந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments