தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்: சென்னை அணி நிர்வாகம்
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே அணிக்காக தீபக் சஹார் 2018 முதல் விளையாடி வருகிறார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார். இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்கு சிஎஸ்கே அணி தேர்வு செய்தது.
இதனிடையே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார். எனவே, நடப்பு ஐபிஎல் போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே அணியினருடன் தீபக் சஹார் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.