அதிக விக்கெட்டுகள் பட்டியலில் சஹால் மீண்டும் முதலிடம்
மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
இந்த ஐபிஎல் 2022 போட்டியில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருப்பது தெரிந்ததே. முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் வனிந்து ஹசரங்கா 23 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். நேற்று நடந்த ஐபிஎல் 63வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் 1 விக்கெட் எடுத்து 24 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். ஊதா நிறத் தொப்பி (பர்பிள் கேப்) தற்போதைக்கு அவரிடமே உள்ளது.
ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தது சென்னை அணியின் ப்ராவோ 2013இல் 32 மற்றும் பெங்களுரூ அணியின் ஹர்ஷல் பட்டேல் 2021இல் 32 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement
யுஸ்வேந்திர சஹால் இதை முறியடிப்பாரா இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.