FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

அறிமுகப் போட்டியில் அசத்திய ரச்சின் ரவீந்திரா!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஏஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.

Updated On : 23 மார்ச் 2024, 2:42 pm IST
சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா
பகிர்:

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஏஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து விரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியில் ரூ. 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி விளையாடினார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தினார்.

டு பிளெஸ்ஸி அடித்த பந்தினை ஓடி வந்து பிடித்து ஃபீல்டிங்கிலும் அசத்தினார். ரஹானே கேட்ச்சிலும் உதவியாக இருந்து கேட்ச் பிடித்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் என்ற விருதினைப் பெற்றார்.

Advertisement

Advertisement

- R Senthilkumar

விருது பெற்ற பிறகு பேசியதாவது:

ஒரு அணியாக முழுமையான செயல்பாடாக பார்க்கிறேன். 3-4 நாள்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறினேன். பயிற்சி எடுத்த களம் வேறு மாதிரி இருந்தது. நான் சிறப்பாக விளையாடினேனா தெரியவில்லை. தொடக்கத்தில் எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்தது. பின்னர் அதுவே எனக்கு உதவியது. இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை நான் பார்த்தே இல்லை. இவர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments