மும்பை டெஸ்ட் உணவு இடைவேளை: கோலி இரட்டை சதம்; இந்தியா 579/7
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலானது அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்களை எடுத்துள்ளது.
அணித்தலைவர் விராத் கோலி 212 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 92 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. 147 ரன்களுடன் தொடர்ந்த கோலி 302 பந்துகளில் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதில் 23 பவுண்டரிகளும் அடங்கும்.