வாஷிங்டன் ஓபன் வெரேவ் சாம்பியன்
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் பட்டம் வென்றார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டி, யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் அமைந்துள்ளது. இதன் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் வெரேவ் 6-2, 6-4 என நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெஸ் டி மினாரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றவர்களான அகாஸி, மைக்கேல் சாங், மார்டின் டெல் பொட்ரோ, ஆகியோர் பட்டியலில் வெரேவும் இணைந்துள்ளார்.
இந்த பட்டம் வென்றது யுஎஸ் ஓபன் போட்டியை எதிர்கொள்ள நம்பிக்கையை தந்துள்ளது. 36 வயது பெடரர், 32 வயது நடால் இருவரும் சிறந்த பார்மில் இன்னும் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துள்ளேன் என்றார் வெரேவ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.