வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெறும் நிலை உள்ளது.
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெறும் நிலை உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 129.4 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 584 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 338 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா மூன்றாம் நாள் முடிவில் 40 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெறும் 99 ரன்களுடன் ஆடி வருகிறது.
வெற்றிபெற அந்த அணிக்கு 239 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய அணியின் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 4-18 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.