FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அபாரம்

ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மனிகா பத்ரா முன்னேறியுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்.
பகிர்:

ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மனிகா பத்ரா முன்னேறியுள்ளார்.

அவர் 11-3, 11-7, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நந்தனாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

அதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூத்த வீரர் சரத் கமல் 11-4, 11-8, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் குரேஷ் முகமதை வென்று தகுதி பெற்றார்.

Advertisement

Advertisement

மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீரர் சத்யன் 11-3, 9-11, 14-12, 11-1, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின சந்டோஸாவை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் மெளமா தாஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.

தோல்விகள்...

* ஆடவர் வாலிபால் பிரிவில் இந்திய அணி 2-3 என்ற செட் கணக்கில் மியான்மரிடம் தோல்வியடைந்தது.
* செபாக்டக்ரா மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி 0-2 என தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.
* மகளிர் ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது.
* ஜூடோ வீரர்கள் ஹர்ஷ்தீப் சிங், கரீமா செளத்ரி ஆகியோர் நாக் அவுட் சுற்றில் தோல்வியுற்றனர்.
* குராஷ் ஆட்டத்தில் இந்தியாவின் டேனிஷ் சர்மா, 
ஜோதி டோகாஸ் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments