துளிகள்...
ஆசியப் போட்டி குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்ற நிலையில் அவருக்கு பஞ்சாப் மாநில அரசு ஊக்கத் தொகை எதையும் இதுவரை அறிவிக்காததது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக தஜிந்தர் வேதனை
* ஆசியப் போட்டி குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்ற நிலையில் அவருக்கு பஞ்சாப் மாநில அரசு ஊக்கத் தொகை எதையும் இதுவரை அறிவிக்காததது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக தஜிந்தர் வேதனை தெரிவித்துள்ளார். அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் சுட்டுரையில் தஜிந்தரின் சாதனையை பாராட்டியதோடு வேறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிதக்கது.
* ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் 6-7 என மலேசியாவிடம் தோற்றது பெரிய பின்னடைவாகும். இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு எளிதாக தகுதி பெறுவதில் இருந்து கடினமான சூழ்நிலையாக அமையும். அலட்சியமான தவறுகளை புரிந்ததால் அணி தோல்வி அடைந்தது என தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் வீரர்களை சாடினார்.
* ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்க வீரருமான கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில சீசன்களில் அணி வெற்றி எதையும் குவிக்காததால் பயிற்சியாளர் வெட்டோரி நீக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
* சென்னை அருகே ஒரகடம் திரிவேணி அகாதெமி ஹிராநந்தனி பூங்காவில் தேசிய சர்க்கியூட் ரேங்கிங் ஸ்குவாஷ் போட்டிகள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம், திரிவேணி அகாதெமி சார்பில் இணைந்து நடத்தப்படும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 120 பேர் உள்பட நாடு முழுவதும் இருந்து 185 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஜூனியர் சிறுவர், சிறுமியர் பிரிவில் 11, 13, 15, 17 வயதுக்குட்பட்டோருக்கும், சீனியர் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோருக்கும் ரேங்கிங் போட்டிகள் நடைபெறும். இதில் வெல்லும் வீரருக்கு ரேங்கிங் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
* 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட் வெள்ளிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார். ஏ லீக் சீசன் அணியான சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள போல்ட் கால்பந்து ஆட்டத்தில் தனது கவனத்தை செலுத்தி கடந்த 10 நாள்களாக தீவிர பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் உள்ளூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.