FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியூஸி-இலங்கை முதல் டெஸ்ட் டிரா

நியூஸிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழை பாதிப்பால் மூன்றாவது நாளான புதன்கிழமையே டிராவில் முடிந்தது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நியூஸிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழை பாதிப்பால் மூன்றாவது நாளான புதன்கிழமையே டிராவில் முடிந்தது.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 282 ரன்களை எடுத்தது. திமுத் கருணரத்னே 79, ஏஞ்சலோ மேத்யூஸ் 83, நிரோஷன் டிக்வெலா 80 ஆகியோர் சிறப்பாக ஆடினர். நியூஸி தரப்பில் டிம் செளதி 6-68 விக்கெட்டை வீழ்த்தினார். 
பின்னர் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்களை குவித்தது. டாம் லத்தம் அபாரமாக ஆடி 264 ரன்களை விளாசினார். கேன் வில்லியம்ஸன் 91, ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ் தலா 50 ரன்களை குவித்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4-127 விக்கெட்டை சாய்த்தார்.
இதன் தொடர்ச்சியாக இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. மூன்றாவது நாளான புதன்கிழமை 115 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இடையிடையே மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை.
குஸால் மெண்டிஸ் 141, ஏஞ்சலோ மேத்யூஸ் 120 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இரு அணி கேப்டன்களும், நடுவர்களும் மைதானத்தின் தன்மையை ஆய்வு செய்து ஆட்டம் டிரா ஆனதாக அறிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments