ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு சென்னை 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிப்பு
ஐபிஎல்லில் வியாழன் அன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு சென்னை அணி 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா: ஐபிஎல்லில் வியாழன் அன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு சென்னை அணி 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வியாழன் இரவு 8 மணிக்கு துவங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் சென்னை அணியினை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
முதலில் களமிறங்கிய சிஎஸ்கே ஆட்டத்தின் முதல் 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளாசி 27, ஷேன் வாட்சன் 36, சுரேஷ் ரெய்னா 31 மற்றும் ராயுடு 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் ஜடேஜாவுடன் சேர்ந்த சென்னை அணியின் தலைவர் தோனி தன்னால் இயன்ற அளவு சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 25 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார். அதே நேரம் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னையின் அதிரடியைக் கட்டுப்படுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.