FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஸி. ஓபன் பாட்மிண்டன்: சாய், சமீர் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் மிஷா ஜிஸ்பர்மேனை வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சமீர் வர்மா 13-21, 21-17, 21-12 என்ற செட்களில் நியூஸிலாந்தின் அபினவ் மனோடாவை தோற்கடித்தார்.
இதையடுத்து 2-ஆவது சுற்றில் சாய் பிரணீத்-இந்தோனேஷியாவின் பான்ஜி அகமது மெளலானாவையும், சமீர் வர்மா -ஜப்பானின் டகுமா யுடாவையும் சந்திக்கின்றனர்.
இதர இந்திய வீரர்களான செளரவ் வர்மா, அஜய் ஜெயராம் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டனர். இதில் செளரவ் வர்மா 21-19, 17-21, 12-21 என்ற செட்களில் ஜப்பானின் டகுமா யுடாவிடம் வீழ்ந்தார். அஜய் ஜெயராம் 22-20, 20-22, 17-21 என்ற செட்களில் ஜப்பானின் ரீச்சி டகெஷிடாவிடம் போராடி வீழ்ந்தார்.
பிரபல இந்தியர்களான சாய்னா நெவால், பி.வி.சிந்து பங்கேற்காத நிலையில், இப்போட்டியின் மகளிர் பிரிவில் களம் கண்டுள்ள இந்தியாவின் ஜக்கா வைஷ்ணவி ரெட்டி 19-21, 21-15, 21-15 என்ற செட்களில் இங்கிலாந்தின் ஜியார்ஜினா பிளான்டை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை தனது முதல் சுற்றில் 21-11, 21-10 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் லுகாஸ் டெஃபோல்கி/மிக்கெல் ஃபாரிமான் இணையை வீழ்த்தியது. மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜூன்/ராமச்சந்திரன் 21-7, 21-15 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரேமன்ட் டாம்/எரிக் வோங் ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மேகனா ஜகம்புடி/பூர்விஷா ராம் இணை முதல் சுற்றில் 21-10, 21-16 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மேகி சான்-ஜோடீ வேகா இணையை வென்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments