குதிரையேற்ற பந்தயத்தை பிரபலப்படுத்த அரசு நிதியுதவி வழங்க வேண்டும்: பெளவாட் மிர்ஸா
குதிரையேற்ற பந்தயத்தை (ஈக்குவஸ்ட்ரியன்) மேலும் பிரபலப்படுத்த அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என ஜகார்த்தா ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் பெளவாட் மிர்ஸா கூறியுள்ளார்.
குதிரையேற்ற பந்தயத்தை (ஈக்குவஸ்ட்ரியன்) மேலும் பிரபலப்படுத்த அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என ஜகார்த்தா ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் பெளவாட் மிர்ஸா கூறியுள்ளார்.
பெங்களூருவில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் ஒன்றாக குதிரையேற்ற பந்தயம் உள்ளது. இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்த அரசு நிதியுதவி செய்ய வேண்டும். இங்கிலாந்து, தாய்லாந்து, ஜப்பான், ஜெர்மனியை முன்மாதிரியாக கொண்டு செயல்படலாம். குதிரையேற்றத்தை பிரபலப்படுத்த ஒரு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்நாட்டு அரசுகள் வீரர்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன. இந்த விளையாட்டுக்கு பெருந்தொகை தேவைப்படும் நிலையில் அரசு இதை செய்யலாம்.
குதிரைகளை பராமரித்தல், கொண்டு செல்வதற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது.
விலங்குகள் தொடர்பான விதிமுறைகளும் வீரர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. அதிகளவில் குதிரையேற்ற போட்டிகளை நடத்த வேண்டும் என்றார் பெளவாட்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.