செய்திகள்

'காதலே நிஜம்'- 2-ஆம் ஆண்டு திருமண நாளில் கசிந்துருகிய விராட் கோலி

தனது காதல் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை புதன்கிழமை பகிர்ந்துள்ளார்.

Raghavendran

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் விறுவிறுப்புடன் இயங்கக்கூடியவர். ஒவ்வொரு கிரிக்கெட் தொடரின் போதும், சிறப்புத் தருணங்களின் போதும், அதுதொடர்பான விடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

இந்நிலையில், தனது 2-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் விதமாக காதல் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை புதன்கிழமை பகிர்ந்துள்ளார். அதில்,

''காதலே நிஜம், வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உங்களை உணர வைக்கும் ஒருவருடன் இணைத்து கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார் என்றால், அதுவே சிறந்த உணர்வாகும், அதற்காக என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரோடா வங்கியில் மேலாளர், அலுவலர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

ஜிம்கானா... பூனம் பாஜ்வா!

‘மௌ'..னி...கா.... மௌனி ராய்!

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

SCROLL FOR NEXT