FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Updated On : 22 அக்டோபர் 2019, 11:50 am IST
பகிர்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 255 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

Advertisement

Advertisement

துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாளில் 162 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனால் இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 4-ஆம் நாள் ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ஸிலும் 133 ரன்களுக்கு சுருண்டது. ஷமி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments