முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதி

வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Updated On : 1 ஜூன் 2021, 2:28 pm IST
கோலி - அனுஷ்கா சர்மா
பகிர்:

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி ஜூன் 3 அன்று இங்கிலாந்துக்குச் செல்கிறது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

Advertisement

Advertisement

இங்கிலாந்தில் நான்கு மாதங்கள் தங்கவேண்டியிருப்பதால் குடும்பத்தினரும் இங்கிலாந்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்து செல்லவுள்ளார்கள்.  

இந்திய ஆடவர், மகளிர் அணியினர் ஒன்றாகச் சேர்ந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். எனினும் மகளிர் அணியினர் குறுகிய காலம் மட்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லப் போவதில்லை என்று அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments