செய்திகள்

இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்: உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அணியவுள்ள சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய சீருடையை கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்து அறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்தச் சீருடையை இந்திய அணியின் பயன்படுத்திக்கொள்வார்கள். இதையடுத்து புதிய சீருடை பற்றிய தங்கள் கருத்துகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

வியட்நாம் பாரம்பரியம்... ரவீனா ரவி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

SCROLL FOR NEXT