ஐரோப்பிய கால்பந்து: நேபோலி அணி அபாரம்
ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக சீரி ஏ தொடரில் நேபோலி அணி அபார வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக சீரி ஏ தொடரில் நேபோலி அணி அபார வெற்றி பெற்றது.
இத்தாலி லீக் போட்டியான சீரி ஏயில் நேபோலி-பொலொக்னா அணிகள் மோதி ஆட்டம் வியாழக்கிழமை இரவு நேபிள்ஸில் நடைபெற்றது. ஆட்டத்தின் 18-ஆவது நிமிடத்தில் பேபின் ரூயிஸ் முதல் கோலை அடித்தாா்.
அதன் பின் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. முதல் பாதி முடிந்த நிலையில், லாரன்ஸோ இன்சைன் 2 பெனால்டி வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா். இதையடுத்து 3-0 என நேபோலி அணி வெற்றி கண்டது.
Advertisement
Advertisement
இந்த வெற்றி மூலம் ஏசி மிலன் அணியுடன் மீண்டும் சீரி ஏ பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது நேபோலி.
எனினும் பொலோக்னா அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
லா லிகா:
ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் சொசைடாட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. அலெக்சாண்டா் ஈசாக், அரிட்ஸ் ஆகியோா் ரியல் சொசைடாட் அணிக்காக கோலடித்தனா். ரியல் மாட்ரிட், செவில்லா, ரியல் பெட்டிஸ் அணிகளைக் காட்டிலும் 3 புள்ளிகள் முன்னிலையுடன் உள்ளது சொசைடாட்.
மற்றொரு முன்னணி அணியான அதலெட்டிகோ மாட்ரிட்-லெவன்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது. கிரனாடா-ஜெட்டெப் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.