தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக பதவி நீக்க வேண்டும்! கே. பாலகிருஷ்ணன்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்...

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஒரு புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது 100% சரி என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் புகார் வரவில்லை, செய்தி வருகிறது, அதனை என்னவென்று விசாரிக்க வேண்டாமா? இவ்வளவு நாள்கள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒரு பெண் அதிகாரியே புகார் கொடுத்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய அநியாயம்? உடனடியாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
அவர் அநாகரிகமாக மோசமான முறையில் நடந்துகொண்டதாக புகார் கொடுத்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்?
ஒரு எம்எல்ஏ மீதான புகாரை அலட்சியப்படுத்தினால் எந்த வகையான முன்னுதாரணம்? அடுத்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதானே அமைந்துவிடும்.
பெண் அதிகாரியாக வந்து புகார் கொடுக்கும் வரை தமிழக அரசு அமைதியாக இருந்தது ஏன்? இது முடிந்தவரை அந்த குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் ஏற்பாடுதான் அது" என்று பேசினார்.