கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை குறித்த செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக் குறித்த விவரங்களை வெளியிடக்கூடாது என செய்தி ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான பதிவுகளை உடனடியாக நீக்கப்படுவதை சைபர் கிரைம் போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர், அரசியல் சாசன உயர் பதவியை வகித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும் எனவும், வழக்கில் டிச.22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ.27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.