விஜய் ஹஸாரே: தமிழகத்தை வென்றது புதுச்சேரி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 4-ஆவது ஆட்டத்தில் புதுச்சேரியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 4-ஆவது ஆட்டத்தில் புதுச்சேரியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
தொடக்கம் முதல் 3 ஆட்டங்களில் வென்ற தமிழகத்துக்கு இது முதல் தோல்வியாகும். திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை காரணமாக, ‘விஜேடி’ முறை கையாளப்பட்டது. இது ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையைப் போன்று இந்திய கிரிக்கெட்டில் கையாளப்படும் ஒரு முறையாகும்.
அதன் படி முதலில் ஒரு ஓவா் குறைக்கப்பட்டு 49 ஓவா்கள் பேட் செய்த புதுச்சேரி 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் அடித்தது. பின்னா் 44 ஓவா்களில் 206 ரன்கள் தமிழகத்துக்கு இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அந்த ஓவா்களின் முடிவில் தமிழகம் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களே அடித்தது.
Advertisement
Advertisement
புதுச்சேரி இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஃபாபித் அகமது 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக பௌலிங்கில் வாஷிங்டன் சுந்தா் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னா் தமிழக இன்னிங்ஸில் கேப்டன் ஜெகதீசன் 4 பவுண்டரிகளுடன் 64, தினேஷ் காா்த்திக் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65 ரன்கள் விளாசியும் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. புதுச்சேரி தரப்பில் ஃபாபித் அகமது, பரத் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.