FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் பேசியது குறித்து...

அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்
பகிர்:

தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (நவ. 1) தெரிவித்தார்.

திருச்சியில் இது தொடர்பாக அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குளுள்ளது. பருவமழைக் காலம் தொடங்குகிறது. டெங்கு ஒழிப்பில் சுகாதாரத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

Advertisement

Advertisement

பருவமழைக்காலங்களில் அரசுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் ரூ. 50 லட்சம் செலவில் நடைப்பாதை அகலப்படுத்தப்பட்டு, கடைகள் வைக்க வசதி செய்துதரப்படும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் கடைகள் அமைக்கப்படும்.

தீபாவளி உணவுப் பொருள்களை வணிகர்கள் சுகாதாரமாகத் தயாரிக்க வேண்டும். உணவு தயாரிப்பை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.

உணவு தயாரிப்பில் புகார்கள் வந்தால், ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே சுகாதாரத் துறையின் முக்கியப் பணி. தீபாவளி பண்டிகையையொட்டி வணிகர்கள் சுகாதாரத்துடன் இனிப்பு, காரங்களை தயாரிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Dengue is under control in Tamil Nadu: Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments