FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்

டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது குறித்து...

20 அக்டோபர் 2026, 6:47 pm IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.
பகிர்:

டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை (அக். 20) தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், கடைய நல்லூரில் டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான தடுப்பூசிகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Advertisement

Advertisement

நாட்டிலேயே முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை ஆய்வு செய்வதற்கான முயற்சியை தொடங்கியுள்ளோம். உலகிலேயே முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அந்தத் தடுப்பூசியை ஆய்வு செய்ய எந்த மாநிலமும் முன்வரவில்லை.

நாம்தான் முதல்முறையாக அதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குப் போதிய அளவு மருத்துவர்கள் நம்மிடம் உள்ளனர். செவிலியர் பற்றாக்குறை இருந்தது. ஆனால், வெளிப்படையான முறையில் மாநிலம் முழுவதும் 7,724 செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியுள்ளோம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அந்தத் தடுப்பூசியானது இந்திய, தமிழக சூழலுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா? அதில் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா? என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு, அதைப் பயன்பாட்டில் கொண்டுவர உள்ளோம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

summary

Public Health and Family Welfare Minister Arunraj said on Tuesday (Oct. 20) that studies have been initiated to prevent dengue outbreaks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments