செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: டிரா செய்த மூன்று இந்திய வீரர்கள்

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை மூன்று இந்தியர்கள் தங்களுடைய ஆட்டங்களை  டிரா செய்துள்ளார்கள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

ஓபன், மகளிர் என இரு பிரிவிலும் இந்திய அணியினர் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஓபன் பிரிவில் மூன்று இந்திய அணிகளும் நேற்று வெற்றி பெற்றன. பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்திய பி அணி ஸ்விட்சர்லாந்தை 4-0 என வென்றது. ஓபன் பிரிவில் மற்ற இரு இந்திய அணிகளும் 3-1 என வென்றன. 

இன்று, இந்திய ஏ அணி பிரான்ஸை எதிர்கொள்கிறது. கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் கார்னெட்டோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 24-வது நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார். அதேபோல ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா சி வீரர் கங்குலி சூர்யா சேகர், ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பி வீரர் சாத்வனி ருனாக், பிரான்செஸ்கோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இத்தாலியின் லாரென்ஸோவுடனான ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT