முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் 5-ம் நாளான நேற்று இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்குர், ஆடவர் 96 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங், 355 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 192 கிலோ எடையைத் தூக்கி அவர் 3-ம் இடம் பிடித்தார்.

2022 காமென்வெல்த் போட்டிகளில் இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.