மெஹிதி ஹசன் மிராஸ் (கோப்புப் படம்) 
செய்திகள்

வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரில் தோற்ற மே.இ. தீவுகள் அணி

கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். 

DIN

2-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் 0-2 என்றும் டி20 தொடரில் 0-2 என்றும் தோற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி.

பிராவிடன்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் 35 ஓவர்களில் 108 ரன்களுக்குச் சுருண்டது. கீமோ பால் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும் நசும் அஹமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். வங்கதேச அணி 20.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏணியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றி: ஹரியாணாவில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டவருக்கு வரவேற்பு

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் கு.செல்லமுத்து

ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்கக் கோரிக்கை

முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கு மாவட்டத்தில் 638 போ் தோ்வு

SCROLL FOR NEXT