பவர்பிளேயின் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது ஓவர் பவர்பிளே ஓவராக மாறும்: டி10 தொடரின் வித்தியாசமான விதிமுறைகள்
டி10 தொடரில் பவர்பிளேயின் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது ஓவர் பவர்ப்ளே ஓவராக மாறும் என வித்தியாசமான விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது மே.இ.தீவுகள் அணி.
டி10 தொடரில் பவர்பிளேயின் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது ஓவர் பவர்ப்ளே ஓவராக மாறும் என வித்தியாசமான விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது மே.இ.தீவுகள் அணி.
உலகம் முழுக்க டி20 போட்டிகள் பிரபலாகி வரும் நிலையில் டி10 போட்டிகளும் தற்போது பிரபலம் ஆகிவருகிறது. மே.இ.அணிகள் உருவாக்கியிருக்கும் '6ஸ்டி' எனப்படும் டி10 தொடர் முற்றிலும் வித்தியாசாமானது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 24-28 வரை நடைப்பெறும். இதன் விதிமுறைகள் பின்வருமாறு:
- 10 விக்கெட்டுகளுக்கு பதிலாக 6-6 விக்கெட்டுகள் மட்டுமே. அதாவது 5 விக்கெட்டுகள் இழந்தாலே ஒரு அணி மொத்த விக்கெட்டுகள் இழந்ததற்கு சமம்.
- பவர்பிளே 2 ஓவர்கள் மட்டுமே. ஆனால் இந்த இரண்டு ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது பவர்பிளே ஓவராக கருதப்படும்.
- 5 ஓவர் ஒரு முனையிலும் மீதி 5 ஓவர்கள் மற்றொரு முனையில் இருந்தும் பந்து வீச வேண்டும். கிரிக்கெட்டில் பொதுவாக ஒவ்வொரு ஒவருக்கும் மாற்றி வீசுவார்கள்.
- 45 நிமிடத்திற்குள் 10 ஓவரினை பந்து வீசி முடிக்க வேண்டும் இல்லையேல் கடைசி 6 பந்துகளுக்கு ஒரு வீரரை பீல்டிங்கிலிருந்து வெளியேற்றப்படுவர்.
- ஃபிரீ ஹிட் பந்தை ரசிகர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். வாக்கெடுப்புக்கென தனி இணையதளம், செயலிகளை வெளியிடப்படும். குறிப்பிட்ட பந்து நோ பாலாக இருந்தும் நடுவர் கொடுக்கத்தவறினால் ரசிகர்கள் வாக்களித்து அந்த பந்தை நோ பாலாக அறிவிக்கலாம். இதன் மூலம் அந்த பந்தில் விக்கெட் ஆனாலும் காப்பாற்றப்படும்.
இதையும் படிக்க: டி10 தொடருக்கு தயாராகும் கிறிஸ் கெயில்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.