முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசையில் கெளரவம்: உலகின் நெ. 1 ஆல்ரவுண்டர் ஜடேஜா

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹோல்டர் 2-ம் இடத்திலும் அஸ்வின் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1 ஆல்ரவுண்டராக முன்னேறியுள்ளார் ரவிந்திர ஜடேஜா.

இலங்கைக்கு எதிராக மொஹலியில் விளையாடிய டெஸ்டில் 175* ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஜடேஜா. இதையடுத்து ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரு படிகள் முன்னேறி நெ.1 இடத்தை அடைந்துள்ளார்.

2017 ஆகஸ்டில் ஒரு வாரத்துக்கு நெ.1 ஆல்ரவுண்டராக இருந்த ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை அடைந்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹோல்டர் 2-ம் இடத்திலும் அஸ்வின் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

டெஸ்ட்: ஆல்ரவுண்டர்கள் தரவரிசை

1. ஜடேஜா
2. ஹோல்டர்
3. அஸ்வின் 
4. ஷகில் அல் ஹசன்
5. பென் ஸ்டோக்ஸ்

முழு கட்டுரையைப் படிக்க →