செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை: 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்த இந்தியா

DIN


மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா - தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஷெஃபாலி வர்மா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 36 ரன்கள் எடுத்தார்கள். தாய்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT