செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸி., தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணியுடன் ஆஸி. அணியிடன் நேற்று (செப்.23) இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முன்னதாக நியூசிலாந்து வீரர் மார்டி கப்டில் 172 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் முதலிடத்தில் இருந்தார். ஆஸி. எதிரான 2வது டி20 போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த போட்டியில் 4 சிக்ஸர்கள் விலாசினார். தற்போது  ரோஹித் சர்மா 176 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இந்த வருடத்தில் மட்டும் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. ரோஹித் சர்மா - 176 
  2. மார்டின் கப்டில்  -172 
  3. கிறிஸ் கெயில் - 124 
  4. இயான் மோர்கன்- 120 
  5. ஆரோன் பின்ச் - 119

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT